ADDED : மே 24, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல் லுார் அடுத்த சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி லட்சுமி (எ) வனிதா, 43; கடந்த 20ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து இவரது கணவர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.