ADDED : ஜன 25, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : வெள்ளிமேடுபேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
திண்டிவனம் அருகே சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு, சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த கீழ்தம்பை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அருண், 22; அதே ஊரை சேர்ந்த மதன், 18; ஆகியோர் நேற்று இளமங்கலம் கிராமத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதியம் 2:00 மணிக்கு பணி முடிந்த பின், அருண் மற்றும் மதனும் அங்கிருந்த இரும்பு ஆங்கிளை இறக்கிய போது, அது மேற்புரத்தில் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது பட்டதில் மின்சாரம் தாக்கி இருவரும் துாக்கி வீசப்பட்டார்.
இதில், அருண் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மதன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

