/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு வசதி இல்லை; திறந்தவெளி கழிப்பிடம் அவதியில் எம்.ஜி.ஆர் நகர் -2 மக்கள்
/
ரோடு வசதி இல்லை; திறந்தவெளி கழிப்பிடம் அவதியில் எம்.ஜி.ஆர் நகர் -2 மக்கள்
ரோடு வசதி இல்லை; திறந்தவெளி கழிப்பிடம் அவதியில் எம்.ஜி.ஆர் நகர் -2 மக்கள்
ரோடு வசதி இல்லை; திறந்தவெளி கழிப்பிடம் அவதியில் எம்.ஜி.ஆர் நகர் -2 மக்கள்
UPDATED : ஜூன் 11, 2025 08:07 AM
ADDED : ஜூன் 11, 2025 07:07 AM

ராஜபாளையம் : குடிநீர் பற்றாக்குறை, மெயின் ரோடு வசதி இல்லை என ராஜபாளையம் நகராட்சி எம்.ஜி.ஆர் நகர் -2 குடியிருப்புவாசிகள் எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் ராமர், முத்துமாரி, வீரமணி, சரஸ்வதி அம்மாள், கலா, லட்சுமி அம்மாள் கூறியதாவது:
சஞ்சீவி மலை ஒட்டிய குடியிருப்பு உருவாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகியும் சாக்கடை வசதி முழுமை அடையவில்லை.
கழிவுநீர் வெளியேற வழியின்றி பள்ளமான பகுதியை நோக்கி வழிந்து ஓடுவதால் தேவையற்ற சச்சரவுக்கு ஏற்படுகிறது.
மெயின் தெரு பக்கவாட்டு பகுதி என முக்கிய தெருக்களில் இதுவரை ரோடு வசதியில்லை. ஏற்கனவே ஒரு பகுதியில் வாறுகால் மட்டும் கட்டி 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது.
கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சப்ளை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை ஆகிறது.
பல்வேறு பகுதியில் இருந்து குடியிருப்பு உருவாக்கி தங்கியும் வேலைக்கு சென்று வரும் தொழிலாளர்கள் தண்ணீர் இருக்கும் பகுதிக்கு அலைந்து வருகின்றனர். வாரம் ஒரு முறையாவது குறிப்பிட்ட நேரத்தில் சப்ளை வேண்டும்.
மலையை ஒட்டி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை முறையாக அகற்றாமல் குவிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மலையை ஒட்டிய பகுதியில் தெருவிளக்கு வெளிச்சம் போதிய அளவு இல்லாததால் விஷ பூச்சிகள், பாம்புகள் தொல்லையால் பயத்துடன் வாழ வேண்டி உள்ளது.
மேடான பகுதியாக உள்ளதால் மழை நேரங்களில் பாதை மண்ணரித்து சென்று ரோட்டை மேலும் மோசமாக்குகிறது.
பெரும்பாலும் தொழிலாளர்களாக உள்ளதால் குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பறை வசதி இல்லை. பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் குறித்து தொடர் கோரிக்கை விடுத்தும் அமைத்து தரப்படவில்லை.
வேறு வழியின்றி மலையடிவார பகுதி புதர்களை திறந்த வெளியாக உபயோகித்து வருகின்றனர்.
பட்டா இல்லாதவர்களுக்கு குடியிருப்பு மனை உள்ளிட்ட அடிப்படை வசதி குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றனர்.