/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா; ஏ.டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் பாதுகாப்பு

ADDED : ஜூலை 28, 2024 04:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில்,2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த திருடர்களை கண்காணிக்கவும் தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் ஈடுபடவுள்ளனர்.
இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வருவர். இதனை முன்னிட்டு 2 ஏ.டி.எஸ். பி.க்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் திருடர்களை கண்காணிக்க 50க்கு மேற்பட்ட குற்றப்பிரிவு போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போதிய அளவிற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வத்திராயிருப்பு போலீசார் எச்சரித்துள்ளனர்.