/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூலிகை பயிர் சாகுபடிக்கு 150 எக்டேர் கூடுதல் இலக்கு
/
மூலிகை பயிர் சாகுபடிக்கு 150 எக்டேர் கூடுதல் இலக்கு
மூலிகை பயிர் சாகுபடிக்கு 150 எக்டேர் கூடுதல் இலக்கு
மூலிகை பயிர் சாகுபடிக்கு 150 எக்டேர் கூடுதல் இலக்கு
ADDED : ஜூன் 20, 2024 04:13 AM
விருதுநகர்: தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகிசெய்திக்குறிப்பு: 2024--25 வேளாண் பட்ஜெட்டில்விருதுநகர் மாவட்டத்தில் மூலிகை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.19லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி வட்டாரங்களில் அதிகளவில் அவுரி, நித்தியகல்யாணி சாகுபடி செய்யப்படுகிறது.
இதன் படி வழக்கமாக உள்ள 204 எக்டேர் அவுரி, நித்தியகல்யாணி சாகுபடி பரப்புடன் கூடுதலாக 150 எக்டேர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். அதாவது மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 150 எக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 எக்டேருக்கு அவுரி பயிருக்கு ரூ. 12,500, நித்தியகல்யாணி பயிருக்கு ரூ.13,000ம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் http://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லதுஉழவன் செயலியில்பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம், என்றார்.