ADDED : ஜூலை 11, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சண்முக குமார் 27.
நரிக்குடி கட்டணூர் பச்சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு திருவிழாவிற்கு வந்தார். நேற்று முன் தினம் இரவு மைத்துனர் கார்த்திக்குடன் அதே ஊரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், திருக்குமரன், தர்மசீலன் தகராறு செய்தனர். சமாதானம் செய்த போது மூவரும் சேர்ந்து அடித்து உதைத்து கத்தியால் கழுத்தில் வெட்டினர். அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கட்டணூர் போலீசார் விசாரிக்கின்றனர்.