/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி கோயிலில் தங்கும் இடம், சாப்பாடு கூடம் இன்றி அவதி
/
இருக்கன்குடி கோயிலில் தங்கும் இடம், சாப்பாடு கூடம் இன்றி அவதி
இருக்கன்குடி கோயிலில் தங்கும் இடம், சாப்பாடு கூடம் இன்றி அவதி
இருக்கன்குடி கோயிலில் தங்கும் இடம், சாப்பாடு கூடம் இன்றி அவதி
ADDED : ஜூலை 19, 2024 06:24 AM
சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் முடிக்காணிக்கை தங்கும் விடுதி, சாப்பாடு கூடம் , சேதமான சுகாதாரவளாகங்கள், முடி காணிக்கைக்கு கட்டாய வசூல் போன்றவைகளால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இருக்கன்குடி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ேகாயில் வளாகம் முழுவதும் தற்போது பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் தங்குவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த பழைய கூடங்கள் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் ரோட்டில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கல் தோண்டப்பட்டு பாதையின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
கரடு முரடான பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு இருப்பதால் வியாபாரிகள் தகரக் கொட்டகை அமைத்து கடைகளை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் மண்டபம் பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் அடுப்புகள் இடிந்து போன நிலையில் தற்காலிகமாக இரும்பு அடுப்புகள் அமைக்கப்பட்டு பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் வைக்கும் பக்தர்கள் தண்ணீர் பிடிப்பதற்காக தனியார் அமைத்திருக்கும் உறை கிணறுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் குழாய் வசதிசெய்து தர வேண்டும்.
தங்கும் விடுதிகள் கட்டுமான பணி நடந்து வருவதால் விடுதி வசதி இன்றி பக்தர்கள் கோயில் சுற்று பிரகாரம் மண்டபத்திலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி உறவினர்களுக்கு சைவ அசைவ விருந்து வைக்கின்றனர்.
இதற்காக அவர்கள் திறந்தவெளியில் தார்ப்பாய் விரித்து விருந்து வைக்கும் நிலை உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் காற்று பலமாக வீசுகிறது . இதனால் உண்ணும் சோற்றில் மண்ணும் விழுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர்: தற்போது கோயில் வளாகத்தில் பெருந்திட்டவளாகம் திட்டத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. விருந்து மண்டபம், பக்தர்களுக்கு தங்கும் விடுதி கழிப்பறை, குடிநீர், ஏசி, பேன் வசதியோடு கட்டப்படுகிறது.
90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் செயல்பாட்டிற்கு வந்துவிடும். பொங்கல் மண்டபம் புதிதாக கட்டப்பட உள்ளது . முடி காணிக்கை தரும் பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி தட்சனை கேட்டால் அலுவலகத்தில் புகார் செய்யும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். பலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். என்றார்.