/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குற்றவியல் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய கோரி நீதிமன்ற புறக்கணிப்பு வழக்கறிஞர் சங்கங்கள் முடிவு

ADDED : ஜூன் 30, 2024 02:46 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:குற்றவியல் சட்டங்களில் மத்திய அரசு செய்துள்ள திருத்தங்களை ரத்து செய்யக்கோரி ஜூலை 1 முதல் 8 வரை தமிழகம் , புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மாநில தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்க மாநில தலைவர் நந்தகுமார் கூறியதாவது;
குற்றவியல் சட்டங்களில் மத்திய அரசு செய்துள்ள திருத்தங்களை ரத்து செய்ய கோரி ஜூலை 1 முதல் 8 வரை தமிழகம் ,புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.
ஜூலை 1ல் நீதிமன்ற புறக்கணிப்பு, உண்ணாவிரதம், ஜூலை 2ல் ஆர்ப்பாட்டம், ஜூலை 3ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், ஜூலை 8ல் திருச்சியில் மாநில அளவில் வழக்கறிஞர்கள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்படும்.
ஜூலை 8ல் பேரணி முடிந்த பின்பு அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.