/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜவுளி பிரிவுகளில் பயிற்சிக்கு அழைப்பு
/
ஜவுளி பிரிவுகளில் பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:37 AM
விருதுநகர் : மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு: மாநில ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் 10ம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங், தொழில் நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விரும்புவோர் https://tntextiles.tn.gov.in/jobsல் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0452 253 0020, 96595 32005 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.