ADDED : ஜூலை 29, 2024 12:10 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கூட்டுறவு ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யூ., சார்பில் மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், ரேஷன் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை எடை குறைவு இல்லாமல் பாக்கெட் முறையில் வழங்க வேண்டும். கடைகளில் உதவியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
பி.ஓ.எஸ்., இயந்திரங்களுக்கு தடையில்லா நெட்வொர்க் சர்வர் அமைத்தல், ரேஷன் ஊழியர்களுக்கு ஓய்வு கால பென்ஷன் உறுதிப்படுத்துதல், அதிகாரிகள் அரசியல்வாதிகள் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நிர்பந்தம் செய்வது, மரியாதை குறைவாக நடத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டுறவு சங்க ஊழியர்கள், நிர்வாகிகள், சி.ஐ.டி.யூ., சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.