/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்
/
மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்
ADDED : ஜூலை 17, 2024 03:58 PM
விருதுநகர்: விருதுநகரில் கே.வி.எஸ்., நுாற்றாண்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 1, 2 வகுப்பில் சிறந்து விளங்க கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: பள்ளி, கல்லுாரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே இதன் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பிளஸ் 2 வகுப்பு முடித்ததும் தவறாமல் உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், விடா முயற்சியுடனும், செய்தால் வெற்றி பெறலாம், என்றார்.