நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதி வழியே பஸ்களை இயக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர்குழு உறுப்பினர் பிரசாந்த் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வாசிக்கும் மலையடிப்பட்டி பகுதி வழியே சத்திரப்பட்டிக்கு செல்லும் ஒரு பகுதி பஸ்களை இயக்க வேண்டும்.
இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் பொது போக்குவரத்து வசதியின்றி தனியார் வாகனங்களை நாடி பாதிப்பிற்கு உள்ளாவதை தடுக்கலாம் என வலியுறுத்தப்பட்டது.