ADDED : ஜூலை 22, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் மாரீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி செல்வி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர்கள் கோவிந்தன், பலவேசம் பேசினர். கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்துதல், மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துதல், உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.