/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
/
மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ADDED : ஜூலை 17, 2024 12:08 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்விக் குழும தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரி செயலர் சங்கர் சேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார். எம்.ரெட்டிய பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் முத்துமுருகன் காமராஜரை பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வரலாறு தமிழ் துறை பேராசிரியர்கள் தியாகராஜன், விஜயலட்சுமி செய்தனர்.
* கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் ராஜா முகமது சேட் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தி வரவேற்றார். செயலாளர் சம்சுதீன் சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை ஆசிரியர்கள் குறிஞ்சி, சத்தியா, பிரிசில்லா ஜானட்ஸ்மித் செய்தனர்.
* திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். செயலாளர் பெரியண்ண ராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். விழாவில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, மாறுவேட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உறவின்முறை துணைத்தலைவர் ராஜேந்திரன், பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.
* ஸ்ரீவில்லிபுத்துார் சூளை விநாயகர் வித்யாலயா சி. பி. எஸ். இ. பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி நிறுவனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் இன்பராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மம்சாபுரம் சுவாமி விவேகானந்தா பள்ளி தாளாளர் கோபால் பரிசுகள் வழங்கினார்.
* வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். தாளாளர் விஜயகுமார், செயலாளர் பால்சாமி, முதல்வர் ராஜேஸ்வரி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.