/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிப்பிற்கான கலெக்டரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை
/
ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிப்பிற்கான கலெக்டரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை
ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிப்பிற்கான கலெக்டரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை
ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிப்பிற்கான கலெக்டரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை
ADDED : ஜூன் 29, 2024 04:45 AM
திருச்சுழி, : திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் சரியாக செயல்படாததால் கலெக்டர் ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணத்தின் செக் பவர், நிதி பரிவர்த்தனைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து உத்தரவிட்டதற்கு, உயர்நீதின்ற மதுரை கிளை இடைகால தடை விதித்தது.
அனைத்து கிராம ஊராட்சிகளின் நிதி நிர்வாகத்தினை எளிமைப்படுத்த தமிழக அரசு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குத் திட்டம் மூலம் டி.என்.பாஸ்., செயலி மூலம் இயக்க ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் திருச்சுழி ஊராட்சியில் மட்டும் கணக்கை முடிக்காமல் ஊராட்சி செயலர், தலைவர் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணத்தை செயல்பட விடாமல் அவருடைய கணவர் குமார் நிர்வாகத்தில் தலையீடு செய்து வருவதாகவும், நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் பாக்கியத்தை பணி ஏற்க விடாமல் தடுத்து வருவதாகவும், ஊராட்சியில் பணிகள் பதிவேடுகள் பராமரித்தல் போன்ற பணிகள் தடைபட்டு வருவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதாகவும் திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மே 5ல், ஊராட்சி தலைவரின் பண பரிவர்த்தனைகளில் முதன்மை கையொப்பமிடும் அதிகாரமானது ஊராட்சி தலைவருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கிட உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பஞ்சவர்ணம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்தநீதிபதி சுவாமிநாதன் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.