/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாயில் ஆலைகளின் கழிவு நீர் கலப்பது அதிகரிப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை
/
கண்மாயில் ஆலைகளின் கழிவு நீர் கலப்பது அதிகரிப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை
கண்மாயில் ஆலைகளின் கழிவு நீர் கலப்பது அதிகரிப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை
கண்மாயில் ஆலைகளின் கழிவு நீர் கலப்பது அதிகரிப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை
ADDED : ஜூலை 12, 2024 03:57 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் இயங்கும் ஆலைகள் கழிவு நீரை கண்மாய், நீர் வழித்தடங்களில் வெளியேற்றுவது தொடர் கதையாக உள்ளது. இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் செயல்படும் ஆலைகள் பெரும்பாலும் கண்மாய், நீர் வழித்தடங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இவை கழிவு நீரை முறையாக சுத்தகரிப்பு செய்யாமல் அப்படியே கண்மாய், நீர் வழித்தடங்களில் வெளியேற்றுகின்றன. இந்த கழிவு நீர் வெயில் காலத்தில் வற்றி விடுகிறது. ஆனால் மழைக்காலத்தில் அப்படியே தேங்கி துார்நாற்றம் வீசுகிறது.
இதனால் நீர் மாசடைந்து கண்மாயில் குளிப்பவர்களுக்கு தோல் அலர்ஜி, கால்நடைகளுக்கு உடல் உபாதைகள் அடிக்கடி உண்டாகிறது. ஆலை கழிவுகள் கலப்பதால் கண்மாயில் மீன் குத்தகை விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கழிவு நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊரகப்பகுதிகளில் பெரும்பாலும் குடிநீருக்காக கண்மாயில் போர்வெல் அமைத்து பயன்படுத்துகின்றனர்.
கழிவு நீர் கலந்து நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் வழியாக நோய்கள் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்கி துார்நாற்றம் வீசும் பகுதிகளில் செல்பவர்களுக்கு வாந்தி, மயக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலைகள் கழிவுகளை முறையாக தரம் பிரிக்காமல் வளாகத்தின் உள்ளே புதைப்பதால் மண் வளம் பாழாகிறது. இது போன்ற ஆலைகளுக்கு அனுமதி கொடுத்ததோடு சரி, அதன் பின் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே ஊரகப்பகுதிகளில் கண்மாய், நீர்வழித்தடங்களில் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.