/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மானாசாலை - தேளி புதிய ரோடு; மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
/
மானாசாலை - தேளி புதிய ரோடு; மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
மானாசாலை - தேளி புதிய ரோடு; மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
மானாசாலை - தேளி புதிய ரோடு; மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:13 AM
நரிக்குடி : 12 கி.மீ. சுற்றி செல்வதை தவிர்க்க மானாசாலையில் இருந்து தேளி வரை புதிய ரோடு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
நரிக்குடி வீரசோழன் பகுதியில் இருந்து மானாமதுரைக்கு செல்ல 12 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. நேரம், எரிபொருள், வீண் அலைச்சல் ஏற்பட்டு வந்தது. ஆத்திர அவசரத்திற்கு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இதனை தவிர்க்க மானசாலையில் இருந்து தர்மம், கொட்டக்காட்சியேந்தல், தேளி வரை 5 கி. மீ., தூரம் புதிய தார் ரோடு அமைத்தால் சுற்றி செல்வதை தவிர்த்து, எளிதில் சென்று வர முடியும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
நபார்டு வங்கி, கிராம சாலைத் திட்டத்தின் கீழ் மானா சாலை- -தேளி வரையிலான புதிய தார் ரோடு அமைக்கும் பணிக்கு ரூ. 5 .82கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்., அடிக்கல் நாட்டப்பட்டது. தார் ரோடு அமைக்கும் பணி முடிவடைந்து நேற்று முன்தினம் மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.