/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, குடிநீர் வசதி இல்லை, மின்கம்பங்கள் சேதம்; பாவாலி எஸ்.காமாட்சி நகர் மக்கள் பரிதவிப்பு
/
ரோடு, குடிநீர் வசதி இல்லை, மின்கம்பங்கள் சேதம்; பாவாலி எஸ்.காமாட்சி நகர் மக்கள் பரிதவிப்பு
ரோடு, குடிநீர் வசதி இல்லை, மின்கம்பங்கள் சேதம்; பாவாலி எஸ்.காமாட்சி நகர் மக்கள் பரிதவிப்பு
ரோடு, குடிநீர் வசதி இல்லை, மின்கம்பங்கள் சேதம்; பாவாலி எஸ்.காமாட்சி நகர் மக்கள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 29, 2024 12:12 AM

விருதுநகர் : பிரதான தெருக்கள், குறுக்குத்தெருக்களில் ரோடுகள் இல்லை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை, கழிவு நீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி பரிதவிக்கின்றனர் பாவாலி ஊராட்சி எஸ்.காமாட்சி நகர் மக்கள்.
விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சியின் எஸ்.காமாட்சி நகரில் 60க்கும் மேற்பட்ட வீடுகள், 10 தெருக்கள் உள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வரும் நிலையில் வீடுகளுக்கு செல்லும் பிரதான தெருக்கள், குறுக்குத் தெருக்களில் ரோடுகள் எதுவும் அமைக்காமல் மண் ரோடாக உள்ளது. இவை மழைக்காலத்தில் சேறும், சகதியுமாகி வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
வீடுகளுக்கும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் தேவையான குடிநீரை குடத்திற்கு ரூ.12 என விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. வீட்டின் மற்ற பயன்பாட்டிற்கு தேவையான உப்புத்தண்ணீர் கூட இல்லாம் மக்கள் திண்டாடுகின்றனர்.
வீடுகளின் கழிவு நீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லை. சின்னமூப்பன்பட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கவுசிகா நதி கரையில் உள்ள நிலத்தில் கொட்டி எரிப்பதால் வரும் புகை காலை நேரத்தில் புகை மூட்டமாக இப்பகுதியில் நிலவுகிறது. இதனால் பலரும் சுவாசப்பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். நிறைய மின் கம்பங்கள் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இப்பகுதியில் வீடுகளுக்கு தேவையான குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தினமும் குடிநீருக்காக குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- மாணிக்கம், விவசாயி.
சின்னமூப்பன்பட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை எஸ்.காமாட்சி நகர் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள நிலத்தில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பலருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டு நோயாளிகளாக மாறியுள்ளனர்.
- ராமலிங்கம், கூலித்தொழிலாளி.
எஸ்.காமாட்சி நகர் பகுதியில் பிரதான ரோடுகள், தெருக்களில் முறையாக ரோடுகள் அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முறையான வாறுகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
- மூர்த்தி, பெயின்டர்.