/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆம்னி பஸ்--லோடு வேன் மோதல்: டிரைவர்கள் காயம்
/
ஆம்னி பஸ்--லோடு வேன் மோதல்: டிரைவர்கள் காயம்
ADDED : ஜூன் 29, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லட்சுமியாபுரத்தில்மதுரை --கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 6:15 மணிக்கு சென்னையில் இருந்து தென்காசி சென்ற ஆம்னி பஸ்சும், கொல்லத்தில்இருந்து ஈரோடு சென்ற லோடு வேனும் மோதிக்கொண்டன.
இதில் ஆம்னி பஸ் டிரைவர் தென்காசி வேல்ராஜ், 37, லோடு வேன் டிரைவர் திருப்பூர் ராஜேஷ்,31, இருவரும் காயமடைந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.