/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடற்ற ஏழைகள் வசிப்பிட கட்டடம் பயன்பாட்டிற்கு வர மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 10, 2024 06:22 AM

விருதுநகர், : விருதுநகர் சவுந்திரபாண்டியன் தெருவில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கான வசிப்பிட கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் வீடற்ற நிலையில் உள்ள ஏழைகள், முதியோர்கள் வசிப்பதற்காக மணிநகரம் சவுந்திரபாண்டியன் தெருவில் வீடற்ற ஏழைகளுக்கான வசிப்பிட கட்டடம் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டது. அதில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.8.60 லட்சத்தில் பணிகள் செய்யப்பட்டது.
இப்படி கூடுதல் வசதிகள் செய்யப்பட்ட கட்டடம் கடந்த ஒராண்டாக பூட்டி கிடக்கிறது. இதனால் வீடற்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் முட்செடிகள் வளர்ந்து புதர்கள் நிறைந்து விஷப்பூச்சிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இது போன்று மக்கள் நலனிற்காக கட்டப்பட்ட கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பூட்டி வைத்திருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் சவுந்திரபாண்டியன் தெருவில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கான வசிப்பிட கட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.