/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பசுமை ஆர்வலர்களை உருவாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
பசுமை ஆர்வலர்களை உருவாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 28, 2024 04:20 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களாக மாணவர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரோர், எட்ரீ அமைப்பு இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஆசிரியர்களுக்கு 4 நாள் உண்டு உறைவிட பயிற்சி வகுப்பு ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் தொடங்கியது.
இதில் கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிக முக்கியம். இதனை சரி செய்ய அரசு மஞ்சப்பை இயக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட தற்போது எண்ணிக்கை அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல், தினசரி பயன்பாட்டில் இருந்து இவற்றை எவ்வாறு குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் பயிற்சி பெற்று மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். என்றார்.