/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்டோக்களில் 10 பேர் ஆபத்து பயணம் தேவை கடிவாளம்
/
ஆட்டோக்களில் 10 பேர் ஆபத்து பயணம் தேவை கடிவாளம்
ADDED : மே 25, 2025 11:01 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் பல்வேறு கிராமங்களுக்கு ஆட்டோக்களில் 10க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் அபாயகரமான சூழல் உள்ளது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தமிழகத்தில் ஆட்டோக்களில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது போக்குவரத்து துறையின் விதி. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை, கிராமங்களுக்கு தேவையான அளவு டவுன் பஸ்கள் இயக்கப்படாதது போன்ற காரணங்களால் மக்கள் ஷேர் ஆட்டோக்களில், 10க்கும் மேற்பட்டோராக பயணித்து வருகின்றனர்.
இதனால் விபத்துக்கள் அதிகரித்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் மம்சாபுரம், தொட்டியபட்டி பகுதிகளுக்கும், நத்தம்பட்டி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதிகளில் சுற்றியுள்ள கிராமங்களுக்கும், வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறைக்கும் ஆட்டோக்களில் 10க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் நிலை காணப்படுகிறது.
இந்த ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களில் கண்மாய் கரைகள் இருப்பதால் எதிரில் கனரக வாகனங்கள் வரும்போது விபத்து அபாயம் காணப்படுகிறது. இதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கடிவாளம் போட்டு தடுக்க வேண்டும்.