ADDED : ஜன 28, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக் கோட்டை, : அருப்புக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நிறுவனத்தை பூட்டிவிட்டு அலுவலர்கள் சென்றுள்ளனர்.
அதிகாலை 1:30 மணிக்கு திடீரென தீப்பற்றியதில் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், மின்விசிறிகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

