/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடுமுறை அளிக்காத 101 கடைகள்ஓட்டல்கள் மீது நடவடிக்கை
/
விடுமுறை அளிக்காத 101 கடைகள்ஓட்டல்கள் மீது நடவடிக்கை
விடுமுறை அளிக்காத 101 கடைகள்ஓட்டல்கள் மீது நடவடிக்கை
விடுமுறை அளிக்காத 101 கடைகள்ஓட்டல்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 27, 2024 05:32 AM
விருதுநகர் : தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு:
குடியரசு தினமான விடுமுறை நாளில் நேற்று தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் கூட்டாய்வு செய்ததில், சட்ட விதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 39 கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் 52, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் 10 என 101 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும்.
இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.