sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

/

குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை


ADDED : ஜன 10, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: 18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1098 அல்லது 181 என்ற எண்கள் மூலம் தெரிவிக்கலாம்.சமூக நல அலுவலக களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரடியாக குழந்தையின் வீட்டிற்கு சென்று விசாரிப்பர்.

குழந்தை திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களோ, திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைப்பர்.

குழந்தை திருமணம் நடந்திருந்தால் மணமகன், அவரது பெற்றோர், குழந்தையின் பெற்றோர், உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். 2 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது பிணையில் விடுவிக்க இயலாத குற்றம். 2023 டிசம்பரில் மட்டும் 4 குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us