/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாக வசதி தேவை
/
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாக வசதி தேவை
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாக வசதி தேவை
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாக வசதி தேவை
ADDED : செப் 29, 2025 06:17 AM
சாத்துார், : சாத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாகம் வசதி செய்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்துார் மெயின் ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. ஜே.எம். 1, ஜே.எம்.2 ஆகிய நீதிமன்றங்களுடன் சப் கோர்ட் நீதிமன்றமும் செயல்பட்டு வருகிறது.
சாத்துார் வட்ட சட்டப் பணிக்குழுவில் 60க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர்.மேலும் நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட நபர்கள் நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.
சிவில் கிரிமினல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகிறது.மேலும் குடும்ப வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன. இதனால் அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் நிலையில் இந்த நீதிமன்ற வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இரு சுகாதார வளாகங்கள் மட்டுமே உள்ளது.
இந்த இரு சுகாதார வளாகங்களிலும் இரண்டு கழிப்பறைகளே உள்ளன.வக்கீல்களும் விசாரணைக்கு ஆஜராகும் மக்களும் இந்த இரு சுகாதார வளாகங்களையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
நீதிமன்றத்திற்கு வரும் காவலர்கள் மற்றும் விசாரணை கைதிகள் வழக்குகளில் ஆஜராக வரும் மக்கள் என நாளுக்கு நாள் நீதிமன்றத்தை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலான சுகாதார வளாகம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வழக்கறிஞர் மாரிமுத்து கூறுகையில், வளாகத்தில் இரு சுகாதார வளாகங்கள் மட்டுமே உள்ளது. ஒருவர் கழிப்பறைக்கு சென்றால் மற்றொருவர் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆண், பெண் வழக்கறிஞர்கள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

