ADDED : ஜூன் 21, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் டி.எஸ்.பியிடம் அ.தி.மு.க.,வினர் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி. ஆர். பி .ராஜா மீது புகார் அளித்தனர்.
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவில் எதிர்க்கட்சி தலைவர் அ.தி.மு.க பழனிச்சாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது கண்டித்தும் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரி சாத்தூர் டி.எஸ்.பி., நாகராஜனிடம் அ.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசாமி,கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி, முன்னாள் நகரச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன்ஆகியோர் புகார் அளித்தனர். இதில் அ.தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.