/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய மருத்துவக்கல்லுாரிகளிலும் செயற்கை பல் சிகிச்சை தேவை
/
புதிய மருத்துவக்கல்லுாரிகளிலும் செயற்கை பல் சிகிச்சை தேவை
புதிய மருத்துவக்கல்லுாரிகளிலும் செயற்கை பல் சிகிச்சை தேவை
புதிய மருத்துவக்கல்லுாரிகளிலும் செயற்கை பல் சிகிச்சை தேவை
ADDED : செப் 19, 2025 03:26 AM
விருதுநகர்:முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் செயற்கை பற்கள் பொருத்துவதை அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் பல் அறுவை சிகிச்சை துறை இருந்தும் செயற்கை பற்கள் பொருத்தப்படுவதில்லை. மாறாக வேர்சிகிச்சை வரை மட்டுமே செய்யப்படுகிறது.
இங்கிருந்து மேல் சிகிச்சை என பதிவு செய்து பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு நோயாளிகள் பதிவு சீட்டுடன் சென்று முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பத்து நாட்கள் வரை காத்திருந்து செயற்கை பற்களை பொருத்தும் நிலையே தொடர்கிறது.
தனியார் பல் மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சைக்காக நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் செயற்கை பற்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.