/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் குண்டாற்றை ஆக்கிரமித்தசீமைக் கருவேல மரங்கள், நாணல்கள்
/
காரியாபட்டியில் குண்டாற்றை ஆக்கிரமித்தசீமைக் கருவேல மரங்கள், நாணல்கள்
காரியாபட்டியில் குண்டாற்றை ஆக்கிரமித்தசீமைக் கருவேல மரங்கள், நாணல்கள்
காரியாபட்டியில் குண்டாற்றை ஆக்கிரமித்தசீமைக் கருவேல மரங்கள், நாணல்கள்
ADDED : பிப் 24, 2024 05:41 AM
காரியாபட்டி : குண்டாற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், நாணல் புற்களால் தடுப்பணைகளில் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. மண் எடுத்த பள்ளங்களை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி, திருச்சுழி பகுதி மக்களின் நீர் ஆதாரமாக குண்டாறு உள்ளது. சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தின் மூலம் காரியாபட்டி பகுதியில் உள்ள சில கண்மாய்களும், தடுப்பணை, வரத்துக்கால்வாய்கள் மூலம் திருச்சுழி பகுதி கண்மாய்களுக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
குண்டாற்றில் இருந்துமணல்கள் சுரண்டி எடுக்கப்பட்டதால் பள்ளங்களாக உள்ளன. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஆபத்தான நிலை இருந்து வருகிறது. தற்போது நெருக்கமான சீமைக் கருவேல மரங்கள், நாணல் புற்களால் ஆறு இருக்கும் அடையாளம் தெரியாமல் போனது.
ஆற்றின் ஓரம் இருக்கக்கூடிய விவசாய நிலங்களை ஒட்டி பொரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், ஆற்றின் அகலம் குறைந்து வருகிறது.
தோணுகால் அருகே தடுப்பணை கட்டப்பட்டு, 2 கி. மீ., தூரம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதே சமயத்தில் சீமைக் கருவேல மரங்கள், நாணல் புற்களால் தேங்கியுள்ள தண்ணீரின் தன்மை மாறி வருகிறது.
பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.இதனை கருத்தில் கொண்டு குண்டாற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பை அகற்றி, சீமைக் கருவேல மரங்கள்,நாணல்களை அப்புறப்படுத்தி, பள்ளங்களை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.