/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன் திறந்த வெளியில் ஓடும் கழிவுநீரால் அவதி

ADDED : ஜன 28, 2024 07:03 AM

சாத்துார் : சாத்துார் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு திறந்தவெளியில் ஓடும் கழிவுநீரால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் நகராட்சியில் 1வது வார்டுக்குட்பட்ட நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் இ. எஸ் .ஐ .,மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தீப்பெட்டி தொழிற்சாலை , அட்டை கம்பெனி, சேவுக் கடை ,தொழி லாளர்கள் இ .எஸ். ஐ., மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற வரும் தொழிலாளர்களுக்கு அப்பகுதியில் ஓடும் சாக்கடை கழிவுநீரால் மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இ .எஸ் . ஐ. மருத்துவமனைக்கு வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீர் வருகிறது. இந்தப் பகுதியில் வாறுகால் வசதியும் இல்லை. மேலும் பாதாள சாக்கடை விரிவாக்க திட்ட பணிகளும் நடைபெறாததால் கழிவு நீர் திறந்த வெளியில் ஓடும் அவல நிலை உள்ளது.
மேலும் கழிவுநீரில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் இ. எஸ். ஐ .மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களும், வரும் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் திறந்தவெளியில் ஓடும் கழிவுநீரை தடுக்கவும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.