/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.118 கோடியில் வளர்ச்சி பணிகள்
/
ரூ.118 கோடியில் வளர்ச்சி பணிகள்
ADDED : ஜன 27, 2024 05:34 AM
திருச்சுழி திருச்சுழி தொகுதியில் மட்டும் அரசு திட்டங்களுக்காக 118 கோடியே 16 லட்சம் நிதியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளதாக, என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
திருச்சுழியில் உடையனம்பட்டி அருகே செல்லும் குண்டாற்றில் தரைப்பாலம் கட்ட, நெடுஞ்சாலை துறை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 7 கோடியே 31 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி நேற்று அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
திருச்சுழி தொகுதி முழுவதுமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 64 புதிய சாலைகள், 6 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. திருச்சுழி - உடையனம்பட்டி அருகே அமைய உள்ள உயர்மட்ட மேம்பாலம் தரமான முறையில் விரைவில் கட்டி முடிக்கப்படும். தொகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

