/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டை அகழாய்வுக்கு நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்
/
வெம்பக்கோட்டை அகழாய்வுக்கு நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்
வெம்பக்கோட்டை அகழாய்வுக்கு நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்
வெம்பக்கோட்டை அகழாய்வுக்கு நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்
ADDED : மார் 16, 2025 01:14 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளத்தில் நடைபெறும் அகழாய்வு பணிக்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கீழடி , வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை திருமலாபுரம், கொங்கல் நகரம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. விஜய கரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வில் 16 குழிகளில் 3254, இரண்டாம் கட்ட அகழாய்வில் 18 குழிகளில் 4653 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையில் 22 குழிகளில் சூது பவள மணி, தங்கமணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் ,சுடுமண் உருவ பொம்மை உள்ளிட்ட 4000 த்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டத்திற்கும் தலா ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 2025 மே மாதம் வரை அகழாய்வு நடைபெற உள்ள இங்கு மேலும் குழிகள் தோண்டப்பட உள்ளதால் கூடுதலாக அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் மற்ற இடங்களை விட இங்கு மட்டுமே அதிக பொருட்கள் கிடைத்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட வண்ண சங்கு வளையல்கள், சூது பவள மோதிரக் கல் இங்கு மட்டுமே கிடைத்துள்ளது. இப்படி அரிய பொருட்கள் கிடைக்கப்பட்டிருந்தும் இங்கு நடைபெறும் பணிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில் ' வெம்பக்கோட்டையில் இந்த ஆண்டு மே மாதத்துடன் அகழாய்வு பணி முடிவடைய உள்ளது. மேற்கொண்டு நீட்டிக்கப்படவில்லை. பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் வெம்பக்கோட்டை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடப்பதற்கு நிதி ஒதுக்க வேண்டும்' என்றனர்.