/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கும் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்
/
அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கும் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்
அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கும் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்
அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கும் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்
ADDED : ஜூலை 01, 2025 02:25 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்கி வருவதாக நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகந்தி, துணைத் தலைவர் தனலட்சுமி, பொறியாளர் எட்வின்பிரைட்ஜோஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ராஜ்குமார், காங்.: தனது வார்டு பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை. பாதாள சாக்கடையை சரி செய்யவில்லை.
செல்வரத்னா, தி.மு.க.,: அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கழிவு நீர் வாறுகாலை துார்வார நடவடிக்கைஎடுக்கப்படும் என தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: பொறியியல் பிரிவில் தினக்கூலி தொழிலாளர்கள் குறைவாக உள்ளனர். தாமிரபரணி குடிநீர் மோட்டார் இயக்க, பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் இயந்திரத்தை இயக்க, மண் அள்ளும் இயந்திரம் இயக்க கூடுதலான பணியாளர்கள் தேவை.
மாதவன், நகராட்சி தலைவர்: 19 தொழிலாளர்களை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹேமா, தி.மு.க.,: தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
சுகாதார அலுவலர்: முதற்கட்டமாக 336 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கால்நடைத்துறை மருத்துவர்கள் மூலம் கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்துலெட்சுமி, சுயேச்சை: எனது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை.
கலையரசன், தி.மு.க.,: தனது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. தோண்டப்பட்ட ரோட்டை குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் சீரமைக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முத்துராமன், தி.மு.க.,: குடிநீர் வடிகால் வாரியத்தினர் நகராட்சியின் அனுமதியின்றி வீட்டு இணைப்பை வழங்குகின்றனர். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இணைப்புகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் பதில் கூறினார். இவ்வாறு விவாதம் நடந்தது.