/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்
/
வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்
ADDED : ஜூலை 02, 2025 07:19 AM
நரிக்குடி, : நரிக்குடி குருவியேந்தல்  நிழற்குடையில் வெட்டுக் காயங்களுடன் ராமு 68, இறந்து கிடந்தார்.  போலீசார் விசாரிக்கின்றனர்.
நரிக்குடி குருவியேந்தல் நிழற்குடை அருகே ராமு  குடிசை அமைத்து,  25 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். திருமணம் ஆகவில்லை.  வருமானத்திற்காக கருவாடு விற்பனை செய்வார்.  இந்நிலையில் நேற்று வெட்டுபட்டு,  ரத்த காயங்களுடன் நிழற்குடையில் இறந்து கிடந்தார்.  திருச்சுழி டி.எஸ்.பி.,  பொன்னரசு தலைமையில் நரிக்குடி போலீசார் விசாரித்தனர். வெட்டு  காயங்களுடன்,  ரத்தக்கறைபடிந்த  கட்டை,  கற்கள் சிதறிக் கிடந்தன.  இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு,  கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
மோப்பநாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று திரும்பியது.  தனிப்படை  போலீசார் விசாரிக்கின்றனர்.  அப்பகுதியில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என போலீசார் தெரிவித்தனர்.

