/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிரான்ஸ்பார்மர்கள் பழுது பார்க்க கப்பலுார் செல்லும் நிலை ஆள் பற்றாக்குறையால் மின் ஊழியர்கள் கடும் அவதி
/
டிரான்ஸ்பார்மர்கள் பழுது பார்க்க கப்பலுார் செல்லும் நிலை ஆள் பற்றாக்குறையால் மின் ஊழியர்கள் கடும் அவதி
டிரான்ஸ்பார்மர்கள் பழுது பார்க்க கப்பலுார் செல்லும் நிலை ஆள் பற்றாக்குறையால் மின் ஊழியர்கள் கடும் அவதி
டிரான்ஸ்பார்மர்கள் பழுது பார்க்க கப்பலுார் செல்லும் நிலை ஆள் பற்றாக்குறையால் மின் ஊழியர்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 20, 2025 11:49 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பழுதாகும் டிரான்ஸ்பார்மர்களை விருதுநகர் துணை மின் நிலையத்தில் உள்ள சிறப்பு பராமரிப்பு கூடத்தில் சரி செய்யாமல், ஆள்பற்றாக்குறையால் மதுரை மாவட்டம் கப்பலுார் சிட்கோவில்உள்ள துணை மின் நிலைய பராமரிப்பு கூடத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதனால் பராமரிப்பு பழுது பணிகள் தாமதமாகி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழக அளவில் 60 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தது. மறுபணிநிரவல் மூலம் தற்போது 40 ஆயிரம் காலிப்பணியிடங்களே உள்ளது. புதிய பணியிடங்கள் நிரப்பாமல், பதவிகளை மறுவரையறை மட்டும் செய்துள்ளனர். களப்பணிகளில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. டிரான்ஸ்பார்மர்கள் பழுதானால் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தலைமை அலுவலக துணை மின் நிலையத்தின்சிறப்பு பராமரிப்பு கூடத்தில் சரி செய்ய வேண்டும். இதற்காக தான் சிறப்பு பராமரிப்பு கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் மதுரை மாவட்டம் கப்பலுார் சிட்கோவிற்கு எடுத்து செல்கின்றனர்.90 சதவீதம் பழுதடைந்த டிரான்பார்மர்களை வேறு வழியின்றிசர்வீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் உள்ளது.சில நேரங்களில் கப்பலுார் மின் பராமரிப்பு கூடத்தினரே நேரில் வந்து பழுது பார்க்கின்றனர். நேரில் சரி செய்ய முடியாத பட்சத்தில் கப்பலுார் கொண்டு வர கூறுகின்றனர். டிரான்ஸ்பார்மர்களை மினிலோடு வேனில் தான் கொண்டு செல்ல முடியும். கப்பலுார் போய், மீண்டும் பழுதுான இடத்திற்கு வர போக்குவரத்து செலவு மின் ஊழியர்களே பார்க்கின்றனர்.
மின்வாரியத்தில்நிறைய சீர்திருத்தம் கொண்டு வருகின்றனர். பதவி மறுபணிநிரவல் செய்து பணி வாய்ப்பை சுருக்குகின்றனர். இதனால் படித்து விட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என்றனர். ஆனால் இன்றோ ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்கின்றனர்.
இத்தனை காலிப்பணியிடங்கள் இருந்தும் தடையில்லா மின்சாரம் தருவதாக அதிகாரிகள் பெருமையை எடுத்து கொள்கின்றனர்.
ஆனால் காலிப்பணியிடங்களால் மன உளைச்சலில் ஊழியர்கள் தான் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே விருதுநகர் மாவட்டத்தில் பழுதாகும் டிரான்ஸ்பாமர்களை இங்குள்ள பராமரிப்பு கூடத்திலே சரி செய்யும் வகையில் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.