/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்வழிப்பாதை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
/
நீர்வழிப்பாதை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நீர்வழிப்பாதை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நீர்வழிப்பாதை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ADDED : செப் 17, 2025 12:43 AM
சிவகாசி : நீர்வழிப் பாதை மற்றும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் உடனடியாக அகற்றுவதுடன், புதிய ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், என சப் கலெக்டர் முகமது இர்பான் அறிவுறுத்தினார்.
சிவகாசியில் சட்டம் ஒழுங்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் முகமது இர்பான் தலைமை வகித்தார்.
அவர் கூறியதாவது, சாலை விபத்துக்கள் நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து அப்பகுதி யில் மீண்டும் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்வழிப்பாதை சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு புதிய ஆக்கிரமிப்புகள் செய்யப்படாததை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாத வகையில் ஆய்வு செய்து, திறந்த வெளியில் பட்டாசு உற்பத்தி செய்தல் உள்ளிட்ட விதி மீறல்களை தடுக்க வேண்டும். பட்டாசு கடைகளில் ஆய்வு செய்து உரிமம் இல்லாத மற்றும் காலாவதியான கடைகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடைகள் அருகே விதி மீறி தகர செட் அமைப்பதை தடுக்க வேண்டும்.
பட்டாசுகளை பஸ், ரயில் என பொது போக்குவரத்து வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் போலீசார், வருவாய் துறையினர், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

