/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
/
உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
ADDED : ஜன 27, 2024 06:38 AM

விருதுநகர், : உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் காட்டும் தி.மு.க., மீது கிராமமக்கள் கோபத்தோடு காத்திருக்கின்றனர். என விருதுநகரில் அ.தி.மு.க., சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:
அ.தி.மு.க.,வின் மாநாடு எழுச்சியாக இருந்தது. ஆனால் தி.மு.க.,வினர் இப்போது நடத்துவது தளர்ச்சி மாநாடு போல் உள்ளது. அ.தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர். கொடுக்கும் கட்சியாக இருப்பது எங்கள் கட்சி தான்.
தேர்தல் வாக்குறுதியாக ஆயிரம் கொடுப்பதாக கூறினீர்கள். ஆனால் தகுதியுடையோருக்கு என இப்போது கூறியுள்ளீர்கள். 10 வீடு கட்டி வாடகை விட்டிருப்போருக்கு ரூ.ஆயிரம் செல்கிறது. ஏழை எளியவர்களுக்கு கிடைக்கவில்லை. இது தான் தகுதியா. உரிமை தொகை எங்களுக்கு இல்லையா என்று கேட்கின்றனர்.
கிராம மக்கள் தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு வரட்டும் என கோபத்தோடு காத்திருக்கின்றனர். பழனிச்சாமி கை காட்டுபவரை வெற்றி பெற செய்யுங்கள். இங்குள்ள எம்.பி.,க்கள் டில்லிக்கு சென்றால் பேச வேண்டும். பேசாத எம்.பி.,க்கள் நமக்கு தேவையில்லை, என்றார்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளியில் தமிழ்பாடம் இல்லை. ஆனால் அவர்கள் ஹிந்தியை எதிர்ப்பதாக கூறுகின்றனர். தி.மு.க., மாநாட்டில் என அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்ட பாடல்கள் ஓடுகிறது. கலாசார சீர்கேடான கூட்டம் என்பதால் தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., தீயசக்தி என்றார். வரும் தேர்தலில் மக்கள் விடை கொடுக்க வேண்டும், என்றார்.
மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன், நகரச்செயலாளர் முகமது நெய்னார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் பங்கேற்றனர்.

