/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்பார்ப்பு
/
காரியாபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 20, 2025 06:43 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் சிப்காட் அமைக்கப்படும் என  அறிவித்தும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதால்  தொழில் முனைவோர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டியில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு சிப்காட்  அமைப்பதற்காக  கே.கரிசல்குளம்,  கல்குறிச்சி  பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இன்னும் நடைபெறவில்லை.
வருமா வராதா என்கிற குழப்பத்தில் தொழில் முனைவோர் தவித்து வருகின்றனர். விரைந்து இடங்களை தேர்வு செய்து, தொழில் முனைவோர் தொழில்களை தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தி தர  வேண்டும்.  காலதாமதம்ஏற்பட்டு வருவதால், அடுத்து தேர்தல் நெருங்கும்பட்சத்தில் அத் திட்டம் கைவிடப்படுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது.  அதற்குள் விரைந்து சிப்காட் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.

