sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாய்களை அச்சுறுத்தும் யானைக் கோரை, நெல் பாதிப்பால் தவிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

/

கண்மாய்களை அச்சுறுத்தும் யானைக் கோரை, நெல் பாதிப்பால் தவிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

கண்மாய்களை அச்சுறுத்தும் யானைக் கோரை, நெல் பாதிப்பால் தவிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

கண்மாய்களை அச்சுறுத்தும் யானைக் கோரை, நெல் பாதிப்பால் தவிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்


ADDED : மே 23, 2025 11:24 PM

Google News

ADDED : மே 23, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் ;விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களை அச்சுறுத்தும் யானைக் கோரை செடிகளை அகற்ற வேண்டும் எனவும், திருச்சுழி, நரிக்குடி வட்டாரங்களில் சாவியான நெல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் நாச்சியார்அம்மாள், வேளாண் இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி முன்னிலை வகித்தனர்.

அப்போது தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் ஆமத்துாரில் வண்டிப்பாதை, இரு நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற கோரி மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் தர்ணா செய்தனர். கலெக்டர் கடந்த குறைதீர் கூட்டத்தில் கூறிய விளக்கத்தை மீண்டும் கூறினார்.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தேவதானம், முகவூர், சேத்துார், வத்திராயிருப்பு கான்சாபுரம், மகாராஜபுரம், ராமசாமிபட்டி பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதில் அரசின் வழிகாட்டல்கள் போதுமானதாக இல்லை. நரிக்குடி, திருச்சுழி வட்டாரங்களில் நெல் சாவியாகி விட்டது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஜெயசீலன், கலெக்டர்: இன்று தேவதானத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது

அழகர்சாமி, திருத்தங்கல்: சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுஉள்ள நிலையில், அதன் மிளகாய் விவசாயத்திற்கு தேவையான மல்சிங் சீட், ட்ரையர் போன்ற கருவிகளை வழங்கி சாகுபடிபரப்பை அதிகரிக்க வேண்டும்.

அருண்சிங், திருச்சுழி: நாற்று பண்ணைகளை பிர்க்கா அளவில் செயல்படுத்த வேண்டும்.

அய்யனார், தேவதானம்: மாவட்ட தொழில் மையம் மூலம் பெறப்பட்ட பொக்லைன் இயந்திரத்திற்கு ரூ.14.5 லட்சம் மானியம் தராமல் இழுத்தடிப்பதால் தவணை செலுத்த முடியவில்லை.

ராஜேந்திரன், அனுமன் சேனா: கவுசிகா நதியில் சீமைக்கருவேலத்தை அகற்றி துார்வாரி, நன்னீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாச்சியார் அம்மாள், கலெக்டர் நேர்முக உதவியாளர்: நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.

நிறைகுளம், ஸ்ரீவில்லிபுத்துார்: பொன்னாங்கண்ணி கண்மாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. அகற்ற வேண்டும்.

அம்மையப்பன்: நித்தியகல்யாணி சாகுபடி குறித்த கருத்தரங்கு நடத்த வேண்டும்.

கணேசன், சிவகாசி: வாடியூர் கண்மாய் 4வது மடை, கன்னிசேரி செல்லும் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை சரி செய்தால் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தப்பிப்பர்.

ஜெயராமன், ராஜபாளையம்: மாலையிட்டான் கண்மாயை துார்வார வேண்டும்.

செல்வம், காரியாபட்டி: மல்லாங்கிணர் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: எங்கள் பகுதி கண்மாய்களில் யானைக் கோரை பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் எடுத்து யானைக் கோரை அதிகரிப்பதை தடுக்க வேண்டும்.

ராமர், சிவகாசி: ஈஞ்சார் செங்குளம் கண்மாயை சீரமைக்க வேண்டும்.

சிவக்குமார், ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதி குளம் கண்மாயில் ஆகாயத்தாமரை, கழிவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது.

செல்வம், இ.கம்யூ, திருச்சுழி: பரளச்சி பெரிய கண்மாயின் 3 மடைகளை சரி செய்ய வேண்டும்.

கோபாலகிருஷ்ணன், நரிக்குடி: திருச்சுழி, நரிக்குடி நேரடி நெல்விதைப்பு நடக்கும் பகுதி. ஆவணி மழையில் நன்றாக பெய்தது அதற்கு பின் மழையில்லாமல் பருவநிலை மாற்றத்தால் நெற்பயிர் விவசாயம் பாழானது. நரிக்குடியில் கணக்கெடுக்க கூறிவிட்டனர். திருச்சுழி, காரியாபட்டியிலும் மழை குறைவு தான் அங்கேயும் கணக்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us