/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அன்னதானத்தால் வயிற்று போக்கு காரணம் சுகாதாரமற்ற தண்ணீரே இனி உணவு பாதுகாப்புத்துறை அனுமதி கட்டாயம்
/
அன்னதானத்தால் வயிற்று போக்கு காரணம் சுகாதாரமற்ற தண்ணீரே இனி உணவு பாதுகாப்புத்துறை அனுமதி கட்டாயம்
அன்னதானத்தால் வயிற்று போக்கு காரணம் சுகாதாரமற்ற தண்ணீரே இனி உணவு பாதுகாப்புத்துறை அனுமதி கட்டாயம்
அன்னதானத்தால் வயிற்று போக்கு காரணம் சுகாதாரமற்ற தண்ணீரே இனி உணவு பாதுகாப்புத்துறை அனுமதி கட்டாயம்
ADDED : ஜூலை 04, 2025 02:51 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் மாதம் நரிக்குடி கல்விமடையில் அன்னதானம் உண்ட 150 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்ட நிலையில், அதற்கு காரணம் சுகாதாரமற்ற தண்ணீர் என தெரியவந்துள்ளதால், உணவு மூலமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க மத வழிபாட்டுத்தலங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தும் அன்னதானத்திற்கு உணவு பாதுகாப்புத்துறையின் முன் அனுமதி பெறுவது அவசியம் என கலெக்டர் சுக புத்ரா உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: அன்னதானத்தில் உணவருந்தும் மக்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுதல் , உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய் பரவுதல் ஆகியவை பரவலாகக் காணப்படுவதாக தெரிகிறது. உணவு ஒவ்வாமை தவிர்த்து, உணவு மூலம் பரவக்கூடிய தொற்று நோய், பெரும்பாலும் உணவு சமைக்கப் பயன்படுத்தும் தண்ணீரால் தான் ஏற்படுகின்றது.
மதவழிப்பாட்டுத்தலங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் 7, 9ல் நரிக்குடி கல்விமடையில் கோயில் அன்னதானத்தில் சாப்பிட்டவர்களில் 150 பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விவகாரத்தை ஆய்வுசெய்து விசாரித்த உணவு பாதுகாப்புத் துறையினர், அன்னதானம் நடத்த உணவுபாதுகாப்புத் துறையின் முன்னனுமதி பெறவில்லை என்பதும், ஆழ்துளைகிணறு மூலம் பெறப்பட்ட சுத்திகரிக்கப்படாத, குளோரின் கலக்காத தண்ணீரை சமையலுக்கும், நுகர்வோர்கள் அருந்துவதற்கும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. எனவே பிரச்சினைக்குரிய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அந்தத் தண்ணீரில் வயிற்று போக்கை ஏற்படுத்தும் கிருமி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள், அன்னதானம் நடப்பதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவுபாதுகாப்பு பதிவுச் சான்று பெறவேண்டும்.
சமைப்பவர்கள், கேட்டரிங் ஏஜன்ஸிகளும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறிலிருந்து தண்ணீர் எடுத்து சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி வேண்டும். உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். அனைத்து வகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவுமாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் 48 மணிநேரத்திற்குப் பாதுகாக்க வேண்டும்.
நிபந்தனைகளைப் பின்பற்றாமல் அன்னதானம் நடந்து அதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டால், அதை ஏற்பாடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும், என்றார்.