/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கந்தனிடம் செல்லுங்கள், என்ன வேண்டும் சொல்லுங்கள் தைப்பூசத்திருவிழா கோலாகலம்
/
கந்தனிடம் செல்லுங்கள், என்ன வேண்டும் சொல்லுங்கள் தைப்பூசத்திருவிழா கோலாகலம்
கந்தனிடம் செல்லுங்கள், என்ன வேண்டும் சொல்லுங்கள் தைப்பூசத்திருவிழா கோலாகலம்
கந்தனிடம் செல்லுங்கள், என்ன வேண்டும் சொல்லுங்கள் தைப்பூசத்திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 26, 2024 04:57 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் தைப்பூசம் விழா பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்னிட்டு காலை 10:35 மணிக்கு விசேஷ பூஜை, சுவாமி, அம்பாள் புறப்பாட்டுடன் தைப்பூசத் திருவிழா நடந்தது. மாலை 4:00 மணிக்கு வால சுப்பிரமணியர் புறப்பாடு, சுவாமி அம்பாளை அழைத்து வருதல், வெள்ளி மயில் பூதம், மான் உள்ளிட்ட பல வாகனங்களில் இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பக்தர்கள் பலர் விரதம் இருந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள பாலசுப்பிரமணிய கோயில், பாவாலி குமாரசுவாமி கோயில்களில் பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு 18 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முருக பக்தர்களின் கந்த சஷ்டி கவசம் பஜனை பாடல்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சுந்தர பாண்டியம் சக்திவேல் முருகன் கோயிலில் தைப்பூச வழிபாடு நடந்தது. பழனி முருகன் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சட்டத் தேர் திருவிழா, தங்கரதம் திருவீதி உலா நடந்தது.
சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா ஜன. 16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினமும் மயில், ரிஷப, உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். நேற்று சட்டத் தேரோட்டம் நடந்தது. நான்கு ரத வீதிகளில் தேர் ஊர்வலம் வந்தது. இரவு தங்கரதம் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. காலையில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
* ராஜபாளையம் சஞ்சீவி மலை உச்சியில் அமைந்துள்ள குமாரசாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
இதேபோல் மாயூரநாத சுவாமி கோயில், அம்பள புலி பஜார் சுப்பிரமணியர், சொக்கர் கோயில், சித்தர் கோயில், மலை முந்தல் விநாயகர் கோயில், செண்பகத் தோப்பு கன்னிமார் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில், தொப்பையன்குளம் சுப்பிரமணியர் கோயில், சத்திரப்பட்டி தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

