/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிசியோதெரபி கிளினிக்அமைக்க மானியம்
/
பிசியோதெரபி கிளினிக்அமைக்க மானியம்
ADDED : ஜன 26, 2024 05:05 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் புதியதாக தொழில் துவங்குவதற்கு பிசியோதெரபி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உரிமையாளர் கட்டணம் முற்றிலும் விலக்கு அளிக்கப்படும்.
பிசியோதெரபி டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், 40 வயதுக்குட்பட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தகுதி உடையவர்கள். www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இத்தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத் தொகை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்று கொள்ளலாம், என்றார்.

