sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலுவலகங்களில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுப்பது அவசியம்

/

அலுவலகங்களில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுப்பது அவசியம்

அலுவலகங்களில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுப்பது அவசியம்

அலுவலகங்களில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுப்பது அவசியம்


ADDED : பிப் 06, 2024 12:09 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோரிக்கை நிறைவேற்ற கோரி கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் தீக்குளிக்க முயல்வோர் அதிகரித்து வருகின்றனர். அதிகாரிகளின் கவனம் ஈர்க்க இவ்வாறு பலர் செய்கின்றனர்.

இந்நிலையில் அவர்களை அந்த நிலைக்கு தள்ளும் வரை சில அதிகாரிகள், அலுவலர்கள் அலட்சியம் செய்வதை ஏற்று கொள்ள முடியாது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நில தகராறு, சொத்து பிரச்னை என குடும்ப காரணங்களுக்காகவும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது, கடன் தொல்லை, வேலையின்மையால் வறுமை என்ற காரணங்களுக்காகவும் பாதிக்கப்பட்டோரில் மனமுடைந்த சிலர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கின்றனர்.

என்ன தான் போலீசார்சோதனை செய்தும், அவர்களின் கண்ணை தப்பி மண்ணெண்ணெய், பெட்ரோலுடன் வந்து அதை உடலில் ஊற்றுகின்றனர். தீப்பெட்டியை எடுக்கும் முன் நிருபர்கள், போலீசார் சேர்ந்து அவர்களை காப்பாற்றுகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பின் சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக தீக்குளிக்க முயன்ற இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டோரில் சிலர் அலுவலகங்கள் வந்து தீக்குளிக்கும் முயற்சி செய்தால் நம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என தவறாக நினைக்கின்றனர்.

இந்த பிரச்னைக்கு மனுக்கள் மீதான நடவடிக்கை தாமதமாவதும், தொடர்ந்து மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதுமே முக்கியகாரணமாக உள்ளது.

மனுக்கள் தாமதமாவதில் உள்ள சிக்கல்களை கண்டறிய வேண்டும். பெறப்பட்ட மனுக்களில் எத்தனை மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இது போன்ற அசம்பாவிதத்திற்கு காரணமாக தீக்குளிக்க முயற்சிப்போரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.அலட்சியம் செய்யும் அதிகாரிகள், அலுவலர்களையும் எச்சரிக்க வேண்டும். இது மட்டுமே இது போன்ற தீக்குளிப்பு முயற்சிகளை கட்டுப்படுத்தும்.






      Dinamalar
      Follow us
      Arattai