நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் மாநில அளவில் வாசிக்க வாங்க என்ற தலைப்பில் நுாலகத்துறை சார்பில் கல்லுாரிகளுக்கிடையேயான போட்டிகள் நடந்தன.
நுாலகர் கிளாரா ஜெயசீலி வரவேற்றார். முன்னாள் கல்லுாரி நிர்வாகி மைதிலி பங்கேற்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று கோ.வெங்கடசாமி நாயுடு கல்லுாரி மாணவர்கள் சுழற்கோப்பை வென்றனர். இணைப்பேராசிரியர் அன்னபூரணி நன்றிக்கூறினார்.

