ADDED : செப் 04, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழாவின் துவக்க விழா, உதய தினம் கொண்டாடப்பட்டது.
அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி எல்.ஐ.சி., கிளை அலுவலக மேலாளர் ராஜன் தலைமை வகித்தனர். ராஜன் பேசுகையில், 70 ஆண்டுகளாக மக்களின் ஆதரவுடன், முகவர்கள் மற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பினால், மத்திய அரசினால் ஐந்து கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி., யின் சொத்து மதிப்பு இன்று 56 லட்சம் கோடிகளுக்கு மேல் உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
2047 ம் ஆண்டிற்குள் அனைத்து இந்திய மக்களுக்கும் காப்பீடு என்ற எல்.ஐ.சி., இலக்கினை அடைவதற்கு அனைத்து முகவர்களும் அயராது உழைக்க வேண்டும். என்றார். அலுவலர்கள், ஊழியர்கள்,வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை காப்பீட்டு ஆலோசர்கள், முகவர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.