/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா
/
மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா
ADDED : பிப் 25, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி, : திருச்சுழியில் மாரியம்மன் கோவில் மாசி பொங்கல் விழா பிப். 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் கரகம் எடுத்தும், அக்னி சட்டி, மா விளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருச்சுழி குண்டாற்றில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.