sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மண் ஓட்டு வீடாக இருந்து காலி இடமான  பகுதிகளுக்கு சொத்து வரி விதிக்கும் நகராட்சிகள்

/

மண் ஓட்டு வீடாக இருந்து காலி இடமான  பகுதிகளுக்கு சொத்து வரி விதிக்கும் நகராட்சிகள்

மண் ஓட்டு வீடாக இருந்து காலி இடமான  பகுதிகளுக்கு சொத்து வரி விதிக்கும் நகராட்சிகள்

மண் ஓட்டு வீடாக இருந்து காலி இடமான  பகுதிகளுக்கு சொத்து வரி விதிக்கும் நகராட்சிகள்


ADDED : செப் 23, 2025 03:44 AM

Google News

ADDED : செப் 23, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழகத்தில் மண், ஓட்டு வீடாக இருந்து காலி இடமான பகுதிகளுக்கு சொத்து வரி விதிக்கும் நகராட்சிகளால் ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 2022--23ல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதில் 600 சதுர அடி வரையுள்ள வீடுகளுக்கு 25 சதவீதமும், 601--1200 சதுர அடி வரை 50 சதவீதமும், 1201 முதல் 1800 வரை 75 சதவீதமும், 1801 ச.அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டது. வழங்கப்பட்ட ஆட்சேபனை மனுக்களை பெயரளவுக்கே பரிசீலனை செய்த நகராட்சி கமிஷனர்கள் அதனை தள்ளுபடி செய்தனர். அதன் பிறகு வரி உயர்வு அமலுக்கு வந்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரிகளை மக்கள் வேறு வழியின்றி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2024ஜூலை மாதம் ரூ.100க்கு குறைவாக சொத்துவரித் தொகை உள்ள இனங்களை களஆய்வு செய்து உயர்த்த உத்தரவிடப்பட்டது. விருதுநகர் நகராட்சியில் பல்வேறு வீடுகளை நேரில் ஆய்வு செய்யாமலே, அதன் உரிமையாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் கணினியில் சொத்து வரியை அதிகமான அளவு உயர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆக. மாதம் விருதுநகர் சங்கரநாராயணபுரம் தெருவில் இரண்டு மண் வீடுகள் இருந்துள்ளது. இதற்கு சொத்து வரியாக ரூ.56 , ரூ.68 இருந்துள்ளது. தற்போது அந்த இரு மண் வீடுகளும் உடைந்து தரை மட்டமாகி காலியிடமாக உள்ளது. நாளடைவில் வீடு இடிந்து போய் விட்டது. இந்நிலையில் தற்போது ரூ.56 என இருந்த சொத்து வரியை ரூ.1107 எனவும், ரூ.68 என இருந்த வரியை ரூ.660 ஆகவும் உயர்த்தினர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அன்று விருதுநகர் வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியை சுட்டிக் காட்டி பேசினார். இதையடுத்து வரி உயர்வை குறைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கள ஆய்வு செய்யாமல் மண் வீடாக இருந்து காலி இடமான பகுதிக்கு சொத்து வரியை ரூ.56 ல் இருந்து ரூ.1107 ஆக விருதுநகர் நகராட்சி உயர்த்தியது போல், நகரின் பல பகுதிகளில் மண் வீடு, ஓட்டு வீடாக இருந்து தரைமட்டமான காலியிடங்களுக்கு கள ஆய்வு செய்யாமலே வரி விதித்து வருகின்றனர். பல நகராட்சிகளிலும் இதே நிலை தான் உள்ளது.இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்யும் சூழலில்,நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். இது போன்று கூடுதல் வரி விதிப்பதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us