/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் மாயம்
/
திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் மாயம்
ADDED : மே 24, 2025 03:59 AM
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் திருமணம் ஆன 3 நாளில் மாயமான புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்துார் கான்வென்ட் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகாமாட்சி மகன் யுவராஜ்,30. சென்னையில் ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்.
துாத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துாரை சேர்ந்தவர் தங்கராஜ் மகள் கார்த்திகா, 28. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் சாத்துாரில் மே 19 ல் திருமணம் நடந்தது.
மே 21ல் மாலை 5:00 மணிக்கு மணமக்கள் இருவரும் சாத்துார் வந்து மாப்பிள்ளை வீட்டில் தங்கியுள்ளனர். மே 22 ல் யுவராஜூம் அவரது தாயார் பாக்கிய லட்சுமியும் காலை 11:30 மணிக்கு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். வீட்டில் தனியாக கார்த்திகா மட்டும் இருந்துள்ளார்.
வங்கியில் பணம் எடுத்து விட்டு மதியம் 12:00 மணிக்கு யுவராஜ், பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது புதுப்பெண் கார்த்திகா மாயமாகி இருந்தார். அவரது அலைபேசியும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. திருமணம் ஆன 3வது நாளில் காணாமல் போன மணப்பெண் குறித்து சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.