ADDED : ஜன 28, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : காரியாபட்டி சந்திரங்குளத்தைச் சேர்ந்த ஜெயராமன் 74. கல்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சைக்கிளில் சென்றார்.
மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது தூத்துக்குடி சென்ற ஆம்னி பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். எட்டையாபுரம் எத்திலப்பநாயக்கன்பட்டி மூக்கையா பஸ்சை ஓட்டினார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.