ADDED : ஜன 26, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,51, இவரது தம்பி நந்தகுமார்,48, நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு பைக்கில் நந்தகுமார் பைக்கை ஓட்ட (ஹெல்மெட் அணியவில்லை) பின்னால் சரவணன் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.
கஞ்சநாயக்கன்பட்டி அருகே மதுரை -தூத்துக்குடி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கார் மோதியதில் நந்தகுமார் பலியானார்.
காயமடைந்த சரவணன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாலுகா போலீசார் கார் டிரைவர் நசரேத்தை சேர்ந்த ராஜநாயகத்திடம் விசாரிக்கின்றனர்.

